உலக செய்திகள்

அவுஸ்ரோலியா நோக்கி பயணித்த 17 பேர் இந்தோனேசியாவில் கைது!

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 17 பேர் இந்தோநேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமத்தராவின் தென்மேற்கு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்தோநேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன அவர்கள் அனைவரும் இலங்கையில்...

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் முடிவுக்கு வந்தது

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த சண்டை, நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை, இஸ்ரேல் இன்னும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கடந்த வாரம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது எரிகணை...

அகதிகளுக்கென புதிய முகாம் திறந்தது ஆஸி

அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகள் மூலம் வரும் ஆயிரக்கணக்கானவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் வரை அவர்களை அவுஸ்திரேலிய கரைக்கு அப்பால் தடுத்து வைக்கும் நோக்கில் மேலும் ஒரு தடுப்பு முகாமை அந்நாட்டு அரசு திறந்துள்ளது. தமது நாட்டில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில்...

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: 18 பேர் கொலை

காசாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களின் போது, இலக்கு தவறி நடந்த தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இஸ்ரேலிய இராணுவம் மறுத்துள்ளது. முன்னதாக, இலக்குத் தவறி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களிலேயே ஒரே...

பாரிசில் கே.பி குழுவினர் மூவர் கைது!

பிரான்சில் போட்டி மாவீரர் தின நிகழ்வை நடாத்த முற்படும் கே.பியின் தலைமைச் செயலகக் கும்பலை சேர்ந்த மூவர் பிரெஞ்சு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கே.பியின் தலைமைச் செயலகத்தின் பிரான்ஸ் இணைப்பாளரான தமிழரசன் (கரிகாலன் அல்லது தென்னா), அவரது உதவியாளர்களான முத்தலி, அமுதன் ஆகிய மூவரும் பொது...

சடலத்துடன் அவுஸ்திரேலியா சென்றடைந்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள்..!

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் அடங்கிய படகிலிருந்து சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்த இந்த அகதிப் படகில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அகதிகள் படகில் 62 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது....

அவுஸ்திரேலியா நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என தடுத்து வைத்த தமிழர் தற்கொலை முயற்சி

அவுஸ்திரேலியாவில் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் ஒரு தமிழர் இன்று தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகங்களினால் பயர்பெக்ஸ் என்று அழைக்கப்படும் ஈழத்தமிழர் ஒருவரே தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த...

தகுந்த காரணம் இல்லாது புகலிடம் கோருவோரை ஏற்றுக் கொள்ள முடியாது - அவுஸ்திரேலியா

புகலிடம் கோரி சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர் எவரும் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அனைவரும் அடுத்த விமானத்திலேயே உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை தொடர்பான திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. ஆட்கடத்தலில்...

பரிதி படுகொலை சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது

கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ்-தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதியின் படுகொலைத் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பிரென்சு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறிலங்காவைச்  சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட...

லண்டன் புறநகர்ப் பகுதியில் குழுவொன்றினால் தாக்கப்பட்டு தமிழ் இளைஞன் கொலை

பிரித்தானியத் தலைநகர் லண்டன் புறநகர்ப் பகுதியில், வைத்து குழுவொன்றினால் தாக்ககப்பட்ட தமிழ் இளைஞன் சிககிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்தத சனிக்கிழமை லூசியம் பகுதியில் இரவு 9:30 மணியளவில் ஒரு குழுவினர் குறித்த தமிழ் இளைஞனைத் தாக்கியுள்ளனர். அதனை அடுத்து துப்பாக்கிச் சத்தமும் கேட்டதனால்...

<< 38 | 39 | 40 | 41 | 42 >>