அவுஸ்திரேலியா நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என தடுத்து வைத்த தமிழர் தற்கொலை முயற்சி

அவுஸ்திரேலியாவில் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் ஒரு தமிழர் இன்று தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகங்களினால் பயர்பெக்ஸ் என்று அழைக்கப்படும் ஈழத்தமிழர் ஒருவரே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டு சிறீலங்காவில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள நிலையில் குறித்த தமிழர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தமிழர் இன்று காலை, தற்கொலைக்கு முயன்ற போது, அதனை ஆப்கானிஸ்தானிய அகதி ஒருவர் கண்டு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளாhர். இதனையடுத்து குறித்த அகதியை அதிகாரிகள் காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு கிழமைகளுக்கு முன்னரும் நாடு கடத்தப்படவிருந்த தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நாடு கடத்தல் உத்தரவு பிற்போடப்பட்டது