உலக செய்திகள்

72 பயணிகளுடன் சென்ற விமானத்தின் சில்லு கழன்று வீழ்ந்தது!

எயார் கனடா ஜாஸ் விமானம் ஒன்றின் முன்புறச் சில்லுக் கழன்று விழுந்த சம்பவம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.  விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அதன் முன்புறச் சில்லுகளில் ஒன்று கழன்று வீழ்ந்தது. எனினும், விமானத்தை விமானிகள் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால்...

அல்ஜீரியாவில் எரிவாயு உற்பத்தி நிலையம் முற்றுகை; 48 பேர் பலி

அல்ஜீரியாவிலுள்ள எரிவாயு உற்பத்தி நிலையமொன்றில் கடந்த 4 நாட்களாக இடம்பெற்றுவந்த முற்றுகை நடவடிக்கையின்போது, குறைந்தபட்சம் 48   பணயக்கைதிகள் மரணமடைந்துள்ளனரென நம்பப்படுகின்றது. 25 பணயக்கைதிகளின் சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள்...

மியாமில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

  அமெரிக்காவின் மியாமியில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 350 பயணிகளுடன் ஏர்பிரான்ஸ் விமானம் பாரிசுக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது 240 பயணிகளுடன் அங்கு...

உடற்பாகங்களை துல்லியமாகக் காட்டும் ஸ்கேனர்களை அகற்ற அமெரிக்கா முடிவு

விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள உடலின் அங்கங்களை பிரதிபலிக்கும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.  கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்தில் தீவிரவாதி விமானத்தில் வெடிகுண்டை பொருத்தி பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக அனைத்து விமான...

7 வயது ஆரம்ப பள்ளி சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த தாய்

ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் தனது ஏழு வயதுச் சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  இச் சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.  இவர் தனது மகனின் பள்ளி பையில் துப்பாக்கியை வைத்து பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.  பள்ளியில் பிறிதொரு...

உலக வறுமை ஒழிப்பிற்கு தேவையான பணத்திலும் அதிகம் செல்வந்தர்களிடம் முடக்கம்

உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் மோசமான வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.  கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன்...

ஜமேக்கா துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி பலி

ஜமேக்கா, சிற்றுண்டிச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் 8 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த இமானி கிரீன் என்ற பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில்...

பிரெஞ்சு வான்படை உதவியுடன் ஹொன்னா நகரை மாலியின் படையினர் மீளக் கைப்பற்றினர்

  இஸ்லாமிய போராளிகளிடம் இருந்து முக்கிய நகரை மாலியின் இராணுவத்தினர் மீளக்கைப்பற்றியுள்ளனர். பிரெஞ்சு வான்படை உதவியுடன் இந்த நகரத்தை மாலியின் படையினர் கைப்பற்றினர். இந்தநிலையில் குறித்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் அறிவிப்பில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக...

சீனாவில் மண்சரிவு; 46 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு குறைந்தபட்சம் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.  இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக அந்நாட்டு அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  சீனாவின் தென் யுனான் மாகாணத்திலேயே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இம்மண்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில்,...

நேபால் பஸ் விபத்தில் 30 பேர் பலி; 12 பேர் காயம்

நேபாலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் பலியாகியுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். நேபாலின் தென் மேற்கு பகுதியிலுள்ள மலை சாலையில் பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நேபால் பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்விபத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளானவர்கள்...

<< 36 | 37 | 38 | 39 | 40 >>