யாழ் செய்திகள்

செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...

சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...

மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.   வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...

துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

இலங்கை செய்திகள்

வடக்கில் போதைப்பொருள் கடத்தலின் முதன்மைபுள்ளி கிளிநொச்சி ஆசிரியர் கைது!

வடமாகனத்தில் போதைப் பொருள் விற்பனையின் முக்கிய நபராக கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர்ஒருவர் இரகசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.இணுவிலைச் சேர்;ந்த குறித்த நபர் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் அடிக்கடி கொழும்பு சென்று வருவது...

கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி சடலமாக மீட்பு!

கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கோப்பாய் பழம்வீதி, நாசிமார் கோவிலடியைச் சேர்ந்த குமாரசாமி மங்கையகரசி என்ற 70 வயது வயோதிபப் பெண்மணியே ஆவார். இன்று காலை குறித்த பெண்மணியின் வீட்டிற்கருகில்...

முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இளைஞர் காலிழப்பு…

யாழ் முகமாலைப்பகுதியில் இரும்பு சேகரிக்கச் சென்ற இளைஞன் கண்ணிவெடியில் சிக்கி கால் பாதத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் முகமாலை இத்தாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் கபில்ராஜ் (வயது18) என்ற இளைஞரே கால்...

எட்டு உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

  இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுகின்ற எட்டு உணவுப் பொருட்களின் விலைகளை நாளை முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.   ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நுகர்வோருக்கு அதிகபட்சம் நிவாரணத்தை வழங்கும் வகையில் இன்று இந்த தீர்மானம்...

இந்தியாவிலிருந்து 46 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

இந்தியாவில் அகதிமுகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். 15 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு பிரிவு குறிப்பிடுகின்றது. இந்த இலங்கையர்களின் விபரங்கள் குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால்...

அண்ணன் தங்கை தற்கொலை - உறவு தெரியாமல் காதலித்தமையால் வந்த வினை!

காலி மினுவன்கொட பிங்கேய்கந்த பிரதேசத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளம் காதல் ஜோடி,     அண்ணன் தங்கையென காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   இந்தக் காதலர்களின் தாய் ஒருவர் என்ற போதிலும் தந்தை இருவர் எனத்...

சிறீலங்காவின் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி தற்கொலை!

சிறீலங்காவின் நுவரெலிய மேல் நீதிமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நீதிமன்றிற்குள் தனது கழுத்தை பிளேட் ஒன்றால் வெட்டிக் கொண்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2006ம் ஆண்டு ஹட்டன் - டிக்கோயா பகுதியில்...

புலிச்சின்னத்தை பச்சை குத்தியிருந்த புலம்பெயர் தமிழர் நல்லூர்கோவிலில் கைது!

பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் இளைஞர் ஒருவர் யாழ்.நல்லூர் ஆலய உள் வீதியில் வைத்து படை புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவதுயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அனோஜ்குமார்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் பல மில்லியன் மோசடி: கணக்காய்வு விசாரணைகள் இன்று ஆரம்பம்

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு மாபிள் பதித்தது தொடர்பில் இடம்பெற்றதாகத் தெரியவரும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை கணக்காய்வாளர் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின்...

கொலை வழக்கில் ஒருவருக்கு 8 வருட சிறை தண்டனை

வடலியடைப்பில் குமாரசாமி இராஜசிங்கம் என்பவரின் கொலை வழக்கின் முதலாம் சந்தேக நபருக்கு யாழ். மேல் நீதிமன்றம் 8 வருட கடுழிய சிறைத் தண்டணை விதித்துள்ளது. 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் 02 ஆம் திகதி பண்டத்தரிப்பு வடலியடைப்பில் குமாரசாமி இராஜசிங்கம் என்பருக்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 4...

<< 243 | 244 | 245 | 246 | 247 >>