யாழ்.போதனா வைத்தியசாலையில் பல மில்லியன் மோசடி: கணக்காய்வு விசாரணைகள் இன்று ஆரம்பம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பல மில்லியன் மோசடி: கணக்காய்வு விசாரணைகள் இன்று ஆரம்பம்

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு மாபிள் பதித்தது தொடர்பில் இடம்பெற்றதாகத் தெரியவரும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை கணக்காய்வாளர் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் போது நிக்கொட்டினால் 14 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்தது.

இதில் எட்டு மில்லியனுக்கு அதிகமான ரூபா பணமோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே ஏற்கனவே சுகாதார அமைச்சும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையிலேயே இன்று கணக்காய்வாளர் நாயகத் திணைக்கள யாழ். அலுவலர்கள், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிதியில் பணிப்பாளர் பவானி பசுபதிராசா மற்றும் பல அதிகாரிகள் பங்கு போட்டு பல மில்லியன்களை சுருட்டியதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.