யாழ் செய்திகள்

'சிறுவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்கள் கூடிய கவன செலுத்த வேண்டும்'

யாழ்ப்பாணத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவருவதால், சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பெற்றோர்கள் கூடிய அக்கறை கொள்ளவேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட உளவள சமூக இணைப்பாளர் கு.கௌதமன் நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும்...

பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது நடவடிக்கை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உரும்பிராய் பகுதியில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பாவனைக்குதவாத காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் ஆ.உதயகுமார் தெரிவித்துள்ளார். பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார...

வலி – கிழக்கு பிரதேச சபைக்கு புதிய செயலாளரை நியமிக்க ஆளுங்கட்சி கோரிக்கை

வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளரை மாற்றி புதிய செயலாளரை நியமிக்குமாறு பிரதேச சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களினால் பிரதேச சபையில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கூட்டத்தில்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14...

பதிவு செய்யப்படாத படகுகள் இனி தொழிலில் ஈடுபட முடியாது

யாழில் பதிவு செய்யப்படாத படகுகளுக்கு கடலுக்குச் செல்ல அனுமதியில்லையென கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். பிராந்திய பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். இதற்கமைய, இதுவரையில் 8017 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆழியவளையில் 357 படகுகளும் தாளையடியில் 440...

சட்டவிரோத மின் பெற்ற 9 பேர் ; 6 லட்சத்து 57 ஆயிரம் ரூபா யாழ் மின்சார சபைக்குக் கட்டினர்

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 9 பேருக்கு யாழ்.நீதி மன்றத்தால் 90 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.அத்துடன் சட்டவிரோத மின்சாரம் பெற்றதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டஈடாக 6 லட்சத்து 57 ஆயி ரத்து 770 ரூபாவை மின்சார சபைக்கு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு யாழ்.நீதிமன்றில் நீதிவான்...

தாலியை கொள்ளையிட முயன்ற ஆசாமிகள் முயற்சி பலனளிக்கத நிலையில் தப்பி ஓட்டம்

யாழ் வடமராட்சி வதிரிப் பகுதியில் வீதியில் தனியாகப் பயணித்த பெண்ணைத் தாக்கிவிட்டு தங்கத் தாலியை அபகரிக்க முற்பட்டவர் பெண்ணின் கூக்குரலால் முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த பெண் வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயமொன்றுக்குச் சென்று விட்டுத் தனியாக வீதியால் திரும்பிக் கொண்டிருந்தபோது...

மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும். 15.09.2012 சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு,...

கடலில் மூழ்கிய மீனவர் மீட்பு

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டி கடலில் மூழ்கிய மீனவரொருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாக யாழ். பிராந்திய கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். நேற்று புதன்கிழமை பகல் 2 மணியளவில் பொலிகண்டி கடலில் இரு மீனவர்கள்...

வட மாகாணத்தினுள் உட்பிரவேசிக்கும் வாகனச் சாரதிகளுக்கு புதிய அறிவித்தல்

வட மாகாண நுழைவாயிலினூடாக ஏ – 9 வீதியில் பயணிக்கும் வாகனச் சாரதிகளுக்கான புதிய அறிவித்தலொன்றை வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா வெளியிட்டுள்ளார். ஏ – 9 பிரதான வீதி புனரமைக்கப்பட்டு வருவதால் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் சாரதிகளுக்கே இந்த...

மின்தடை பற்றிய செய்தி

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை பற்றிய செய்திக்கு மேலதிகமாக வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும். 13.09.2012 வியாழக்கிழமை  காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30...

<< 619 | 620 | 621 | 622 | 623 >>