சட்டவிரோத மின் பெற்ற 9 பேர் ; 6 லட்சத்து 57 ஆயிரம் ரூபா யாழ் மின்சார சபைக்குக் கட்டினர்

சட்டவிரோத மின் பெற்ற 9 பேர் ; 6 லட்சத்து 57 ஆயிரம் ரூபா யாழ் மின்சார சபைக்குக் கட்டினர்

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 9 பேருக்கு யாழ்.நீதி மன்றத்தால் 90 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.அத்துடன் சட்டவிரோத மின்சாரம் பெற்றதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டஈடாக 6 லட்சத்து 57 ஆயி ரத்து 770 ரூபாவை மின்சார சபைக்கு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு யாழ்.நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் பொலிஸாருடன் இணைந்து இலங்கை மின்சார சபை யினர் நடத்திய திடீர் பரிசோனையின் போது சட்டவிரோத மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது 9 பேரும் தம்மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.அதன்படி ஒவ்வொரு வரும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்படுத்திய தொகையாக மின்சார சபையினரால் மன்றில் தனித்தனியே நஷ்ட ஈட்டுத்தொகை குறிப்பிடப்பட்டது.

9 பேருக்கும் 6 லட்சத்து 57 ஆயிரத்து 770 ரூபா நஷ்டஈட்டுப் பணமாக மின்சார சபையால் மன்றில் தெரிவிக் கப்பட்டது. அதனை மின்சார சபைக்கு செலுத்து மாறு உத்தரவிட்டு ஒவ் வொருவருக்கும் 10 ஆயிரம் ரூபா வீதம் 90 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப் பளித்தது நீதிமன்று.