பதிவு செய்யப்படாத படகுகள் இனி தொழிலில் ஈடுபட முடியாது

யாழில் பதிவு செய்யப்படாத படகுகளுக்கு கடலுக்குச் செல்ல அனுமதியில்லையென கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். பிராந்திய பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இதற்கமைய, இதுவரையில் 8017 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆழியவளையில் 357 படகுகளும் தாளையடியில் 440 படகுகளும் பருத்தித்துறை கிழக்கில் 1060 படகுகளும் பருத்தித்துறை மேற்கில் 1029 படகுகளும் காங்கேசன்துறை கிழக்கில் 611 படகுகளும் காங்கேசன்துறை மேற்கில் 214 படகுகளும் சண்டிலிப்பாயில் 445 படகுகளும் சுழிபுரத்தில் 672 படகுகளும் ஊர்காவற்றுறையில் 614 படகுகளும் நெடுந்தீவில் 386 படகுகளும் வேலணையில் 735 படகுகளும் யாழ்ப்பாணம் மேற்கில் 935 படகுகளும் யாழ்ப்பாணம் கிழக்கில் 344 படகுகளும் சாவகச்சேரியில் 175 படகுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட 14 பிரதேசங்கள் இப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.