இந்திய செய்திகள்

இம்முறை ஜெயலலிதா சற்று மாறுதலாக கடிதம் எழுதியுள்ளார்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக மத்திய அரசு முன்வரவேண்டும் என கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது என்பது தொடர் கதையாக நீண்டு கொண்டே போகிறது. நேற்று ஒரு...

நிரந்தரத் தீர்வு அவசியம்! ஜெ. - மோடிக்கு கடிதம்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு அவசியம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,  தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கைக் கடற்படையினர்...

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் - வாசன்

மீனவர்கள் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.  ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,  கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி...

கருணாநிதி - ரஜினி சந்திப்பு: காரணம்...?

கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை திடீரென சந்தித்தார்.  இன்று காலை 10.50 மணி முதல் 11.10 மணி வரை இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.  “கலைஞர் பிறந்த நாளன்று நான் ஐதராபாதில் இருந்தேன், அதனால் வாழ்த்துக் கூற முடியவில்லை. ஆகவே இன்று வாழ்த்துக்களைக்...

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மீன் மருத்துவம்

ஐதராபாத்தை சேர்ந்த பத்தினிகவுடு குடும்பத்தினர் ஆஸ்துமா நோயாளிகளுக்காக ஆண்டுதோறும் இலவச மீன் மருத்துவ முகாமை நடத்தி வருகிறார்கள்.  ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மருந்தை மீனுக்குள் வைத்து அந்த மீனை உயிருடன் நோயாளிகளை விழுங்க செய்வதே இந்த மருத்துவத்தின் சிறப்பாகும்.  இந்த மீன் மருத்துவ...

தாஜ்மகாலின் எழிலுக்கு பொலிவூட்டும் பணிகள் விரைவில்

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மகாலின் அழகுக்கு மெருகூட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.  மனைவி மும்தாஜின் நினைவாக மொகலாய மன்னர் ஷாஜஹான் கி.பி. 1632 மற்றும் 1652-ம் ஆண்டுகளுக்கு இடையில் வெண்பளிங்குக் கற்களினால் உருவாக்கிய தாஜ்மஹால், தூசினாலும், மாசினாலும் தனது பொலிவை இழந்து,...

மோடிக்கு எதிரான வழக்கு: 12ம் திகதி முதல் வாதம்

2012ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது, வேட்பு மனுவில் தனது மனைவி குறித்து தகவல் தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கு மீதான வாதம், இம்மாதம் 12ம் திகதி முதல் நடைபெறும் என்று ஆமதாபாத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பான வழக்கு,...

வேலைக்கு வந்த இளம் சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்வதற்காக ரூர்கி பகுதியில் இருந்து இரண்டு இளம் வயது சகோதரிகளை அழைத்து வந்தார்.  சமீபத்தில், ரூர்கியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த இளைய சகோதரி, அந்த பாதிரியார் தன்னையும் அக்காவையும்...

சுஷ்மா சுவராஜ் நியமனத்திற்கு உலகத் தமிழர் பேரவை எதிர்ப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஈழன் இன்று சனிக்கிழமை காலை 11 மணி அளவில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் தனது ஆதரவாளர்களோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை...

வறுமையின் கொடுமை: பெற்ற குழந்தையை 13,000 ரூபாவுக்கு விற்ற தாய்

வறுமை காரணமாக தனக்கு புதிதாக பிறந்த கைக்குழந்தையை கவனிக்க இயலாத சூழ்நிலையால் அக்குழந்தையை ரூபாய் பதிமூன்றாயிரத்திற்கு பெண் ஒருவர் விற்றுள்ளார்.  கவுரி தாஸ் என்ற அப்பெண்மணிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. அவரது கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். கவுரியின்...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>