ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மீன் மருத்துவம்

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மீன் மருத்துவம்

ஐதராபாத்தை சேர்ந்த பத்தினிகவுடு குடும்பத்தினர் ஆஸ்துமா நோயாளிகளுக்காக ஆண்டுதோறும் இலவச மீன் மருத்துவ முகாமை நடத்தி வருகிறார்கள். 

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மருந்தை மீனுக்குள் வைத்து அந்த மீனை உயிருடன் நோயாளிகளை விழுங்க செய்வதே இந்த மருத்துவத்தின் சிறப்பாகும். 

இந்த மீன் மருத்துவ முகாம் ஐதராபாத் நாம் பள்ளியில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை வரை முகாம் நடக்கிறது. 

மீன் மருத்துவம் பெற 3 இலட்சம் நோயாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தில் இடம் பிடிக்க இன்று காலையிலேயே அவர்கள் குவிய தொடங்கினார்கள். 

முதியவர்கள், ஊனமுற்றவர்கள், பெண்கள், வி.ஐ.பி.க்கள் என தனித்தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை தெலுங்கானா அரசு செய்து உள்ளது. 

மேலும் மீன்வளத்துறை சார்பில் 1 இலட்சம் மீன் குஞ்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தேவைக்கு ஏற்ப மேலும் மீன் குஞ்சுகள் வரவழைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.