மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் - வாசன்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் - வாசன்

மீனவர்கள் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, 

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி ஏற்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் அரசின் முழுமுயற்சி தான் காரணம். இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெருமளவை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும் வலியுறுத்தி கேட்டுப்பெற வேண்டும்.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2 வார காலத்துக்குள் மீனவர் சிறை பிடிப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றார் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 73 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.