தாஜ்மகாலின் எழிலுக்கு பொலிவூட்டும் பணிகள் விரைவில்

தாஜ்மகாலின் எழிலுக்கு பொலிவூட்டும் பணிகள் விரைவில்

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மகாலின் அழகுக்கு மெருகூட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. 

மனைவி மும்தாஜின் நினைவாக மொகலாய மன்னர் ஷாஜஹான் கி.பி. 1632 மற்றும் 1652-ம் ஆண்டுகளுக்கு இடையில் வெண்பளிங்குக் கற்களினால் உருவாக்கிய தாஜ்மஹால், தூசினாலும், மாசினாலும் தனது பொலிவை இழந்து, களையிழந்து காணப்படுகிறது. 

இந்த மாசுகளை அகற்றி தாஜ்மஹாலுக்கு பொலிவூட்ட, பெண்கள் முகத்தை பொலிவுப்படுத்த பயன்படுத்தும் ‘முல்தானி மட்டி’ பாணியில் பளிங்குக் கற்களின் மீது 2 மில்லி மீட்டர் அளவுக்கு மண்ணில் சில வகை இரசாயனம் கலந்து குழைக்கப்பட்ட சேற்று களிம்பினை பூசி, சில நாட்களில் அந்த களிம்பு காய்ந்த பின்னர், அதன் மீது மெருகூட்டும் இரசாயன கரைசல் கொண்ட நீரை பாய்ச்சி, மண் களிம்பை கழுவி எடுப்பதன் மூலம் தாஜ்மஹாலின் மீது படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்க இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

ஏற்கனவே, கடந்த 1994, 2001 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் இவ்வகையிலான முறைப்படி தாஜ்மஹாலை தொல்லியல் ஆய்வாளர்கள் தூய்மைப்படுத்தியுள்ளனர்.

கடைசியாக 2008-ம் ஆண்டு நடைபெற்ற இப்பணியில் தொல்லியல் நிபுனர்கள் 24 பேரை கொண்ட குழு, ரூ.10.4 இலட்சம் ரூபாய் செலவில் சுமார் 6 மாத காலம் உழைத்து தாஜ்மஹாலை மெருகூட்டியது நினைவிருக்கலாம்.