72 பயணிகளுடன் சென்ற விமானத்தின் சில்லு கழன்று வீழ்ந்தது!

எயார் கனடா ஜாஸ் விமானம் ஒன்றின் முன்புறச் சில்லுக் கழன்று விழுந்த சம்பவம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. 

விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அதன் முன்புறச் சில்லுகளில் ஒன்று கழன்று வீழ்ந்தது. எனினும், விமானத்தை விமானிகள் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

அந்த விமானத்தில் 72 பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.