யாழ் செய்திகள்

வடமாகாண சபையின் உதவி பொருட்கள், கொஸ்லந்தையில் பகிர்ந்தளிப்பு

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக வடமாகாண சபையால் சேரிக்கப்பட்ட பொருட்கள், திங்கட்கிழமை (24) பொதுமக்களிடம் கொண்டு சென்று கையளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.   யாழ்ப்பாணம்...

தமிழினத்துக்காக போராடி வீர காவியமான மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம் : அனந்தி சசிதரன்

"தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்; இராணுவம் தடுத்தாலும் நாம் பூசிப்போம்."  இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி...

மலேரியா தடுப்பு இயக்கத்தின் தற்காலிக ஊழியர்கள் நியமனம் கோரி போராட்டம்! (PHOTOS)

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மலேரியா தடுப்பு இயக்கத்தில் தற்காலிக இணைப்பில் பணியாற்றிய ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் எனக் கோரி வட மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக நேறறு திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.  மலேரியா தடுப்பு இயக்கத்தில் 4...

யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் மீது விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலை வன்மையாக கண்டிக்கின்றோம்! விஜயகாந்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.    இதில் நான்கு மாணவர்களின் பெயர்களும், ஆசிரியர் சங்கத் தலைவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு அவர்கள் மாவீர்ர் தினம் கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும் அவர்கள் கொல்லபடுவார்கள் எனவும்...

பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் தர உத்தியோகத்தர் ஒருவர் அவரது விடுதியிலிருந்து, திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.    அம்பாறை தெஹியத்தகண்டியை சேர்ந்த என்.ரத்நாயக்க (வயது 27) என்பவரே இவ்வாறு சடலமாக...

துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பெற்றோருக்கு அதிக கடப்பாடுகள்: பொறுப்பதிகாரி

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதை கட்டுப்படுத்துதற்கு பெற்றோர்களே அதிக கடப்பாட்டுடன் செயற்படவேண்டும். சிறுவர்களை துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது பெற்றோர்களின் கைகளில் உள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி றொஹான் மகேஷ் திங்கட்கிழமை (24)...

நாவாந்துறையில் பொலிஸ், இராணுவம் குவிப்பு (PHOTOS)

மைலோ கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியை அடுத்து, இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக, யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியின் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.    யாழ்.துரையப்பா...

'மாவீரர் நாள் கொண்டாட விடமாட்டோம்', 'சுடுவோம்' என அச்சுறுத்தி சுவரொட்டிகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர். இராசகுமாரன் ஆகியோரை எச்சரிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.    'இவர்கள் புலிகளை உருவாக்குகின்றனர்', 'இவர்களை சுடுவோம்', 'மாவீரர் தினம் கொண்டாட விடமாட்டோம்' ஆகிய...

'தாய்நாட்டின் தீர்ப்பு மஹிந்த'

ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.    'தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்த' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளிலும்...

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களில் 13பேரை, டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதவான்...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>