மலேரியா தடுப்பு இயக்கத்தின் தற்காலிக ஊழியர்கள் நியமனம் கோரி போராட்டம்! (PHOTOS)

மலேரியா தடுப்பு இயக்கத்தின் தற்காலிக ஊழியர்கள் நியமனம் கோரி போராட்டம்! (PHOTOS)

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மலேரியா தடுப்பு இயக்கத்தில் தற்காலிக இணைப்பில் பணியாற்றிய ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் எனக் கோரி வட மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக நேறறு திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். 

மலேரியா தடுப்பு இயக்கத்தில் 4 வருடங்கள் தொடக்கம் 14வருடங்கள் வரையில் தற்காலிக இணைப்பில் பணியாற்றிய 67 ஊழியர்களே தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினர். 

இது தொடர்பில் அவர்கள் தெரிவித்த விடயங்கள் வருமாறு: 

கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியாகியிருக்கும் வட மாகாண ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்கும் சுற்றறிக்கையின் பிரகாரம் 180 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இதன் அடிப்படையில் எம்மையும் நிரந்தர சேவைக்கு உள்வாங்க கோருகிறோம். 

மேலும் எங்களில் பலர் 4 தொடக்கம் 14 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இந்நிலையில் எம்மில் பலருக்கு 30 வயதாகும் நிலையும் காணப்படுகின்றது. எனவே இது எமக்கு கிடைத்திருக்கும் பெறுமதியான சந்தர்ப்பமாகும். 

இதனை விட்டால். எக்காலத்திலும் நாம் அரச சேவைக்கு உள்வாங்கப்பட மாட்டோம். – என்றனர்.