யாழ் செய்திகள்

வலி. தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் மாரடைப்பால் மரணம்

வலி. தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் சண்முகம் சிவகுமார்  (வயது 69) மாரடைப்புக் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (23) காலை உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த 21ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் இவர்...

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கைது

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பருத்தித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.    இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் கிளையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவ்விருவரையும்...

எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் கைது

 இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று பகல் இவர்கள் கச்சதீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயமே நெடுந்தீவு கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முடிவை 25ம் திகதி அறிவிப்பாராம்!

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் பொது எதிரணியின் பக்கம் தாவி வருகின்ற நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என அமைச்சர் டக்ளஸிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு எதிர்வரும் 25ம் திகதி என் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள...

யாழ். பல்கலை. மாணவனை கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அச்சம்!

யாழ்.பல்கலைக்கழக 3ம்வருட கலைப்பீடத்தின் ஊடகப்பிரிவு மாணவனை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மை சம்பவங்களை குறித்த மாணவனின் பெற்றோர் இன்றைய தினம் மனந்திறந்து வெளிப்படுத்தியிருப்பதுடன் தங்கள் மகனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்.  மேற்படி...

மதுபோதையில் குழப்பம் விளைவித்தவருக்கு சீர்திருத்த உத்தரவு

மல்லாகம் நகரப்பகுதியில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டு, வீதியால் சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபரை 100 மணித்தியாலங்கள் நீதிமன்ற வளாகத்தில், சமுதாய வேலையுடன் கூடிய சமூக சீர்திருத்தபணிக்கு உட்படுத்துமாறு மல்லாகம் மாவட்ட...

மேலும் இரு கிணறுகளில் எண்ணெய் கசிவுகள்

சுன்னாகம் மின்சார சபையின் எண்ணெய் கசிவுகள் தற்போது கட்டுவன் பகுதியில் உள்ள சில கிணறுகளிலும் கசியத் தொடங்கியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.    சுன்னாகம் மின்சார சபையின் மின் பிறப்பாக்கியினால் வெளியிடப்படும் எண்ணெய் கசிவுகள் சுன்னாகம், மல்லாகம், கீரிமலை பகுதியில் உள்ள...

வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்க மாநாடு

வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்க மாநாடு சனிக்கிழமை காலை 11 மணிக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் சங்க தலைவர் வ.சிவகுமார் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.    இந்த மாநாட்டில் வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கத்தினர் 3 கோரிக்கைகளை...

காசோலை மோசடியில் ஈடுபட்டவர் கைது

காசோலை மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை கம்பர் மலைப்பகுதியினை சேர்ந்த 59வயதுடைய நபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ரீ.எஸ்.மீடின், சனிக்கிழமை (22) தெரிவித்தார்.   கொம்மாந்துறை...

கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

சட்டவிரோதமான முறையில் ஆறு பசுமாடுகளை கடத்துவதற்கு பயன்படுத்திய சிறு உழவு இயந்திரத்தை 50 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக செலுத்தி மீட்டுச்செல்லுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன், வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.   2012ஆம் ஆண்டு கரவெட்டி மேற்கினைச் சேர்ந்த 45 வயதுடைய...

<< 6 | 7 | 8 | 9 | 10 >>