யாழ் செய்திகள்

யாழில் 3 மாதங்களில் 500 வாள்வெட்டுச் சம்பங்கள் பதிவு – யாழ் பொலிஸ்

யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 500 வாள்வெட்டுச் சம்பங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரெரா தெரிவித்தார். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...

சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்! இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம்

யாழ். ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவு நேரம் இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது இச்சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. ஆனைப்பந்தியில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலேயே...

யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் 08.09.2012 சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை...

லேகியம், மூக்குப்பொடி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட  மூக்குப்பொடி, மற்றும் லேகியம் விற்பனை செய்த இருவருக்கு 6 ஆறாயிரம் ரூபா அபராதம் விதிக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நல்லூர் பகுதியில் இன்று யாழ். மதுவரி நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த பகுதியில் இந்தியாவில்...

யாழிற்கு கிரிக்கெட் வீரர்கள் வருகின்றனர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான மலிங்க, மத்தியூஸ், குலசேகர, சண்டிமல் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு நாளை  சனிக்கிழமை வருகை தரவுள்ளதாக யாழ். கிரிக்கெட் மத்திய சங்கம் அறிவித்துள்ளது. முரளி வெற்றிக்கிண்ண 20 - 20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை முதல் 4 மைதானங்களில் நடைபெறவுள்ளது....

தாதியொருவர் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். வைத்திசாலையில் கவனயிர்ப்பு போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியில் புகுந்து இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து யாழ் போதானா வைத்திசாலையின் தாதியர்களினால் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் தென்னிலங்கையைச் சேர்ந்த தாதியர்கள்...

கோப்பாய் அரச காணிகளில் வசிக்கும் 286 குடும்பங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை

கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்டபட்ட பகுதிகளில் அரச காணியில் வசித்து வருகின்ற 286 குடும்பங்களுக்கு காணி உரிமப் பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த 286 குடும்பங்களுக்கும் காணி...

முகமாலையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்து (Photos)

முகமாலையில் நேற்று மாலை டிப்பர் வாகனஙகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த இருவர் சிறு காயங்களுக்குள்ளானதாகத் தெரியவருகின்றது.  

டெங்கு நோயால் சிறுவன் உயிரிழப்பு

யாழ். வடமராட்சிப் பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. யாழ். துன்னாலை கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த நாகேந்திரன் தனுசன் (வயது 16)  என்ற சிறுவனே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த...

வரமராட்சியில் மாணவியுடன் வல்லுறவில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்த இளைஞர் குழு: தப்ப விட்ட கோப்பாய் பொலிஸார்

வீதி திருத்த வேலைகளுக்காக வந்தவர் பாடசாலை மாணவியொருவருடன் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இளைஞர் குழுவினால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்...

<< 621 | 622 | 623 | 624 | 625 >>