தாதியொருவர் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். வைத்திசாலையில் கவனயிர்ப்பு போராட்டம்

தாதியொருவர் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். வைத்திசாலையில் கவனயிர்ப்பு போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியில் புகுந்து இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து யாழ் போதானா வைத்திசாலையின் தாதியர்களினால் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் தென்னிலங்கையைச் சேர்ந்த தாதியர்கள் தங்கியுள்ள விடுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு புகுந்த இனந்தெரியாத நபரின் தாக்குதலில் தாதி ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை கண்டிக்கும் முகாமாகவும் தென்னிலங்கை தாதியர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று காலை 10 மணி தொடர்கம் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தாதியர் விடுதி வைத்தியாசாலைக்கு வெளியில் இருப்பதால் இவ்வாறான சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் எடுத்து தென்னிலங்கையில் இருந்து வருகை தந்து கடமையாற்றும் தாதியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தாதியர் சங்கதினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் இந்த முறைப்பாடு தொடர்பாக உடனடியாக தாதியர்களை வைத்தியசாலை வளாகத்தினுள் தங்கவைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்வதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் மயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வைத்தியாசாலை பணிப்பாளர் பவானந்தராஜா ஆகியோர் உறுதிமொழி வழங்கியதை அடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது