இலங்கை செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் இன்று தரையிரங்கும் ரோவர் விண்கலம்: நேரடி ஒளிபரப்பு

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று தரையிறங்க இருக்கிறது.   பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது...

பெண்ணின் கைப்பை, தொலைபேசி திருட்டு

வல்லிபுர ஆழ்வார் கோயில் வழிபாட்டிற்குச் சென்றிருந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய கைப்பையுடன்  சேர்த்து 30 ஆயிரம் ரூபா பணத்தையும் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு கைத் தொலைபேசியையும் இழந்துள்ளார். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது; சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20...

பகிடிவதை; நியாயம் கேட்டவர் தாக்கப்பட்டார்

சகோதரிகளுக்கு கீழ்த்தரமான வார்த்தைகளால் பகிடிவதை செய்த இளைஞனிடம் நியாயம் கேட்ட சகோதரர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் பரபரப்பாக நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

உடுவில் பகுதியில் திருட்டு

உடுவில் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தினையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சுன்னாகம் உடுவில் கிழக்கு பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற இத் துணிகர கொள்ளைச் சம்பவம்...

நயினை நல்லூர் திருத்தலம் பஜனை பாயாத்திரை 13ஆம் திகதி ஆரம்பம்

நல்லூர்க் கந்தன் இரதோற்சவத்தையொட்டி வருடந்தோறும் நடைபெறும் நயினை  நல்லூர் திருத்தலம் பஜனைப் பாதயாத்திரை  எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அன்றைய தினம் அபிஷேக பூசைவழிபாடு இடம் பெற்று வேல் பூசையுடன் மேல் எடுத்துக் கொண்டு மண்கும்பான் , ...

சிங்கள கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சீன மீனவர்களை விடுவிக்க சீன அரசுகோரிக்கை!

மட்டக்களப்பிலிருந்து 13 மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்ததாகத் கூறப்படும் 37 சீனப் பிரஜைகள் சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 200 மைல்களுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தமொன்று மீன்பிடி அமைச்சுடன் சீனா செய்துகொண்டுள்ளதாக கடற்படையினர்...

கல்கிஸையில் விபச்சார விடுதி நடத்திய ஜந்துபேர் கைது!

கல்கிஸ்ஸை - சுமனாராம வீதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றில் இருந்து ஆண்உள்ளிட்ட ஐந்துபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) மாலை இவ்விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது நிலையத்தை இயக்கி வந்ததாகக்...

யாழ் ஊரெழுவில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம், ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கோடாரியினால் வெட்டப்பட்டு இறந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் கிளிசொச்சி,இராமநாதபுரம்,புதுக்காட்டைச் சேர்ந்த முருகேசு சிவராசா (வயது 45)...

மட்டக்களப்பு மாமாங்கம் புகையிரதத்தில் மோதி இருவர் பலி!

மட்டக்களப்பு மாமாங்க பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் மகனுமே உயிரிழந்துள்ளனர். மதுபோதையில் குறித்த இருவரும் ரயில் தண்டவாளத்தில் நித்திரைகொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் மதுபான போட்டல் ஒன்று...

மட்டக்களப்புக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனப் பிரஜைகள் கைது

சிறீலங்கா கடல் எல்லையில் மட்டக்களப்புக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனப் பிரஜைகள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். குறித்த...

<< 245 | 246 | 247 | 248 | 249 >>