இலங்கை செய்திகள்

கொழும்பு - கண்டி நகர்சேர் கடுகதி ரயில் எஞ்ஜின் செயலிழப்பு

  கொழும்பு - கண்டி மார்க்கத்திலான நகர்சேர் கடுகதி ரயிலின் எஞ்ஜின் கம்பஹா தாரளுவ பகுதியில் செயலிழந்துள்ளது.   இன்று முற்பகல் 8.35 அளவில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயில் புறப்பட்டதாக ரயில்வே கட்டுபாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது. இந்த ரயிலில் வேறொரு என்ஜினை இணைத்து...

இணையதளத்தில் இலங்கையின் வாக்காளர் பதிவேடு

  இலங்கையின் வாக்காளர் பதிவேடு முதல் தடவையாக இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.   2011 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடு, தேர்தல்கள் ஆணையாளரினால் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டார். slelections.gov.lk. என்ற இணையதளத்தில்...

யாழில் பெண்ணொருவருக்கு தவறாக சிகிச்சை அளித்த வைத்தியசாலை சிற்றூழியர் கைது

அனலைதீவு பகுதியில் கணவனால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு தவறாக வைத்தியம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார். கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டதால் உடலில் 30ற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ள மேற்படி பெண், அனலைதீவு பகுதியில் இருக்கும்...

மீள்குடியேற்ற மக்களுடன் பிரிட்டன் எம்.பி.க்கள்...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற குழுவினர் இன்று  அரியாலைப் பகுதிக்கு விஜயம் செய்து மீள்குடியேறியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை யாழப்பாணத்திற்கு விஜயம் செய்த குழுவினர் இன்று மாலை அரியாலை,...

டீசல் உரிய தரத்துடன் இல்லை என்பது நிரூபனம் - இ.போ.ச

  சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள டீசல் உரிய தரத்துடன் இல்லை என்பது நிரூபனமாகியுள்ளதென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.   நிறுவன மட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின்போது இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி ஒருவர்...

பிரான்சிற்கு செல்வதற்காக சென்ற இளம்பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தல்.

பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி...

வங்கியின் அடகு நகைகள் கையாடல்செய்த ஊழியருக்கு விளக்கமறியல்

மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர், கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் கையாடல் செய்துள்ளதாக முறையிடப்பட்டதை அடுத்து குறித்த நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில்...

யாழில் மின்விநியோகத் தடை

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காகவும் உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் யாழில் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ்.பிராந்திய மின்சார சபை இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதன்படி...

<< 246 | 247 | 248 | 249 | 250