விளையாட்டு

முதலாவது இனிங்சில் இலங்கை அணி 247 ஓட்டங்கள்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சில் இலங்கை அணி 247 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. மஹேல ஜயவர்தன 91 ஓட்டங்களையும் அஜந்த மத்தியூஸ் 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். முன்னதாக தமது முதலாவது இனிங்சிஸ்காக விளையாடிய...

முதல் ரெஸ்ட் தொடங்கியது நியூசிலாந்து வசம் துடுப்பு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்சமயம் காலி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

5வது போட்டியும் கைவிடப்பட்டது! தொடரை வென்றது இலங்கை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5வது ஒருநாள் சர்வசே போட்டி கைவிடப்பட்டுள்ளது. 28.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 123 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக போட்டி...

7 விக்கெட்டுக்களால் இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதற்கிணங்க முதலில்...

நியூசிலாந்தை துடுப்பெடுத்தாட அழைத்தது இலங்கை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்து நியூசிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்துள்ளது.

தில்ஷான் நீக்கம்

நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள 4ம் 5ம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரத்ன தில்ஷான் பங்கேற்க மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. காயம் காரணமாக அவர் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக சாமர கப்புகெதர இணைக்கப்பட்டுள்ளதாகவும்...

தில்ஷானின் அபார சதத்தால் இலங்கை அணிக்கு வெற்றி

கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி...

இலங்கை அணிக்கு 197 வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஆறு விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணி இப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 33 ஓவர்களில் 197 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

மழை காரணமாக போட்டி பாதிப்பு: 50 ஓவர் 48ஆக குறைந்து 33 ஆகியது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி மழை காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டி 33 ஓவர்களுக்கு மட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிகள் பந்துவீச்சாளர்களுக்கு எதிரானவை: மஹேல

சர்வதேசக் கிரிக்கெட் சபையால் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களானது துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சாதகத்தன்மையையும், பந்துவீச்சாளர்களுக்கு எதிரானவையுமாகக் காணப்படுவதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேசக் கிரிக்கெட் சபையின் புதிய...

<< 26 | 27 | 28 | 29 | 30 >>