இந்திய செய்திகள்

முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் டெல்லியில் இன்று (30) மாலை காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தனது 92 வயதில் உயிரிழந்துள்ளார். ஐ.கே. குஜ்ரால் 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1998 ஆம் ஆண்டு...

இலங்கை அருகே கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை வானிலை மையம் இன்று (27) வெளியிட்ட தகவல் வருமாறு:- வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலமான கடல் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 மணி...

திருச்சியைச் சேர்ந்த மினரல் வாட்டர் தொழில் அதிபர்: தற்கொலைக்கு முன் வீடியோ வாக்குமூலம்!

திருச்சியைச் சேர்ந்த மினரல் வாட்டர் தொழில் அதிபர் சரவணன் 20.11.2012 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் அவர், தற்கொலைக்கான காரணத்தையும், தற்கொலைக்கு காரணமானவர்களையும் பற்றி கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் அடிப்படையிலும், சரவணன் மனைவி செல்வி பொலிசிடம்...

இந்தியாவிற்கு தங்கம் கடத்திய மட்டக்களப்பு முகம்மது முஜாமில் கைது

சென்னை விமான நிலையத்தில், இலங்கை பயணியிடம், ஒன்பது லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை, சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர். கொழும்பில் இருந்து சென்னைக்கு, 22.11.2012 காலை, 9:30 மணிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. அதில் சென்ற பயணிகளை, விமான நிலைய சுங்க துறையினர்...

பூந்தமல்லி முகாமில் ஈழத்தமிழன் காலவரையறையற்ற உண்ணாவிரதம்

எந்தவித வழக்கும் இல்லாமல் சட்டவிரோதமாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் தன்னை விடுதலை செய்யக்கோரி ஈழத் தமிழரான பரமேஸ்வரன் என்பவர் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.   இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சென்னையில் 2008ஆம்...

கசாப்பின் கடைசி நிமிடங்கள் – வெளியே கசிந்த இரகசியம்!

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதில் ரகசியம் காக்கப்பட்டது எப்படி என்ற விவரம் தெரியவந்துள்ளது… கசாப் அனுப்பிய கருணை மனுவை கடந்த 5ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்து, உள்துறை அமைச்சகத்துக்கு பைலை அனுப்பினார். வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பிய உள்துறை அமைச்சர்...

எய்தவன் இருக்க அம்பை மட்டும் தூக்கில் போடுவதா?

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மும்பை தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டு விட்டதால் மும்பை தாக்குதல் வழக்கு முடிந்து விட்டதாக மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் சிண்டே கூறி இருப்பது வியப்பாக உள்ளது. தாக்குதலுக்கான சதி...

கசாப் கதை முடிந்தது: சாந்தன்,முருகன்,பேரறிவாளன் நிலை என்ன?

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்பை தூக்கிலிடப்பட்டதன் பின்னதாக தமிழக சிறைகளில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளின் பக்கம் அநேகரது கவனமும் திரும்பியுள்ளது. தமிழக சிறைகளில் மொத்தம் 11 பேர் தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் உச்சநீதிமன்றத்தில் 6 பேர் தண்டனை...

மலவாயிலில் மாணிக்க கல் உதயம்! சென்னையில் இலங்கையர் கைது

மலவாயிலில் மறைத்து வைத்து இரத்தினக்கல் கடத்திய இலங்கை பிரஜை ஒருவர் சென்னை விமான நிலையத்தில் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதுடைய சபூவன் என்ற நபரே கைது செய்யப்பட்டவராவார். விமானத்தில் இருந்து சென்ற குறித்த நபரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு...

தமிழகத்தில் ஸ்டாலின் கால் படாத இடமே இல்லை - கருணாநிதி பெருமிதம்

திராவிடம் என்பது நச்சுச் சொல் அல்ல என்றும், திராவிடத்தை ஏற்காதவர்களை புறம் தள்ள வேண்டும் என்றும் தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையை அடுத்த மறைமலைநகரில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு...

<< 54 | 55 | 56 | 57 | 58 >>