யாழ் செய்திகள்

முளைச்சு மூன்னு இலை விடவில்லை...அதுக்குள்ள ஊர்சுற்ற கிளம்பியவர்கள் அகப்பட்டனர்

பெற்றோருக்குத் தெரியாது திருகோணமலை செல்வதற்காக வீட்டில் இருந்து 12 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துக் கொண்டு யாழ் பஸ்நிலையம் வந்த 11 வயதான 3 சிறுவர்கள் பொதுமக்களிடம் அகப்பட்டனர்.    வண்ணார்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையில் பயிலும் 11 வயதான சகோதரர்கள் இருவரும் அவர்களது அயல்...

அன்று கல்விக்குப் பெயர்போன யாழ். இன்று களவுக்கு..!?

யாழ். மாவட்டத்தில் போலியான தங்க ஆபரணங்களை வங்கியில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபடுவோர் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு...

இ.போ.ச. நேரக் கணிப்பாளர் தாக்கப்பட்டமையின் எதிரொலி! தனியார் பஸ்கள் மீது ஐந்து சந்தியில் கல் வீச்சு

  மானிப்பாய் வீதியூடாகச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் மீது நேற்றைய தினம் திடீரென யாழ். ஐந்து சந்திப் பகுதியில் மறைந்திருந்து கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டதால் மாற்று வழிப் பாதையூடாகத் தனியார் பஸ் சேவைகள் இடம்பெற்றன. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது: காரைநகர் வலந்தலைச்...

வல்லிபுரக் கோவிலுக்குச் சென்ற பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

  நேற்று வெள்ளிக்கிழமை வல்லிபுரக் கோவிலுக்கு தனது கணவருடன் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அபகரிக்கப்பட்டது. குடும்பஸ்தர் ஒருவர் தனது மகளை முன்னாலும் மனைவியை பின்பகுதியிலும் இருக்கச் செய்து சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில்...

யாழ் மின்சாரசபையின் மின்தடை ரத்துப் பற்றிய அவசர செய்தி

  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை பற்றிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த 22.09.2012 சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, பளை வரையான தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய...

வருடாந்தம் புதிதாக ஐயாயிரம் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்

யாழ் மாவட்டத்தில் வருடாந்தம் புதிதாக ஐயாயிரம் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான வசதிகளுடன் கூடிய பிரிவு வட மாகாணத்தில் இல்லாததால் அவர்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்ல நேரிடுவதாகவும் அமைச்சு...

யாழ் ஐந்து சந்தியில் அமெரிக்காவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்; பொலிஸார் பூரண ஆதரவு

முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து யாழ். ஐந்து சந்திப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இன்று பகல் 1;00 க்கு யாழ்ப்பாணம் பெரியபள்ளி வாசலில் இருந்து ஆரம்பித்த கண்டனப்பேரணி ஐந்து சந்தியில் நிறைவடைந்தது. இதன்போது...

யாழ் வேம்படியில் இரு பேருந்துகள் மோதிக் கொண்டது; சாரதியும், நடத்துனர் தப்பியோட்டம்

யாழ். வேம்படிப் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் இரு பேருந்துகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. கொழும்பை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்தில் சிக்கிக் கொண்டன. இவ்விபத்துச் சம்பவத்தினால் இரு பேருந்துகளில்...

யாழில் கடற்கரை பகுதிகளை ஆழமாக்குவதற்கு நடவடிக்கை

தொண்டமனாறு தொடக்கம் கற்கோவளம் வரையான கடற்கரை பகுதிகளை ஆழமாக்குகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட திட்டப்பணிப்பாளர் சுதர்சன், வடமராட்சி கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் தலைவர் அருளானந்தம் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க...

யாழில் வியட்நாம் ஊடகவியலாளர்கள்

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் 15 பேர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள். வியட்நாமின் கனோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். ஊடகப் பயிற்சியின் ஒரு பகுதியாக இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்று யாழ்ப்பாணம் வந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பயிற்சிகள் செயல்...

<< 615 | 616 | 617 | 618 | 619 >>