30 கிலோ எடையுள்ள போதை பொருள் கடத்தியதாக இந்தியர்கள் நான்கு பேர் கைது

30 கிலோ எடையுள்ள போதை பொருள் கடத்தியதாக இந்தியர்கள் நான்கு பேர் கைது

மலேசியாவில், 30 கிலோ எடையுள்ள போதைப் பொருளை கடத்தியதாக, ஒரு பெண் உட்பட, நான்கு இந்தியர்கள், கைது செய்யப்பட்டு உள்ளனர்.கோலாலம்பூர் விமான நிலைய, சுங்க அதிகாரி, பதாருதீன் முகமது ரபீக் கூறியதாவது:மலேசியாவுக்கு, போதைப் பொருள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில், 312 கிலோ, போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நைஜீரியாவைச் சேர்ந்த, 20 பேரும், இந்தியர்கள், 19 பேரும், ஈரானியர்கள், எட்டு பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த, நான்கு பேரும், மலேசியர்கள், மூன்று பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன், கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்த. 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உட்பட, நான்கு இந்தியர்கள், “கேடமைன்’ என்ற போதைப் பொருளை கடத்தி வந்ததற்காகக் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 30 கிலோ எடையுள்ள, போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.மலேசியாவில், போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.