3வது டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் மண்டியிட்டது இந்தியா!

3வது டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் மண்டியிட்டது இந்தியா!
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.   
 
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 569 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது. அதிகபட்சமாக பெல் 167 ஓட்டங்களும் மற்றும் பேலன்ஸ் 156 ஓட்டங்களும் குவித்துள்ளனர்.   
 
இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்துள்ளது.    இந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகனே 54 ஓட்டங்களும் தோனி 50 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்கள் வீழ்த்தினர்.   
 
இந்நிலையில் 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.  ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடிய இங்கிலாந்து வீர்ர்கள் 4 விக்கெட்கள் இழந்து 204 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்தது. 
 
அதிகபட்சமாக குக் 70 ஓட்டங்களும் ரூட் 56 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டத்தை டிக்ளர் செய்த நிலையில் இங்கிலாந்து அணி 444 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்துள்ளது.   
 
இதனை அடுத்து 445 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தது. அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க இந்தியா அனைத்தும் விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.
 
 இங்கிலாந்து சார்பில் அலி 6 விக்கெட்கள் வீழ்த்தினர்.   இதனை அடுத்து இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 
 
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்களையும் வீழ்த்திய ஆண்டர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.   
 
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளது.