219 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணிக்கு 220 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

அந்த அணி சார்பில் களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குக் சிறப்பாக ஆடி 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

எனினும் பின் வந்த வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வௌியேற 48.1 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இங்கிலாந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க மூன்று விக்கெட்டுக்களையும், அஜந்த மெண்டீஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதன்படி 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி அடுத்தாக துடுப்பெடுத்தாடவுள்ளது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை ஒரு இருபதுக்கு 20, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. 

இதன்படி முன்னதாக இடம்பெற்ற 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

அத்துடன் இதுவரை இடம்பெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்று 2-2 என சமநிலையில் உள்ளன. 

இந்தநிலையில் இன்று நடைபெற்றுவரும் 5வதும் இறுதியுமான இந்தப் போட்டியில் வெற்றி பெரும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.