20க்கு இருபது போட்டி இலங்கை வசம்

20க்கு இருபது போட்டி இலங்கை வசம்

இங்கிலாந்துக்கு எதிரான 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி ஒன்பது ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. 

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஒரு 20க்கு இருபது போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 

இதில் நேற்று இடம்பெற்ற 20க்கு இருபது போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, ஏழு விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

184 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது. 

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் எதிர்வரும் 22– ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.