1000 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரம்

1000 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரம்

துபாயில் 829.8 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ´புர்ஜ் கலிபா´ கட்டிடம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் அதிக உயரமான கட்டடமாக கருதப்படுகிறது. 

இந்த சிறப்பை முறியடிக்கும் வகையில் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் ரம் 1000 மீட்டர் உயகொண்ட பிரமாண்ட இரட்டை கோபுரத்தை கட்ட லண்டனில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

யாங்ட்சே நதிக்கரையை ஒட்டியுள்ள உஹானில் 47 ஏக்கர் நிலப்பரப்பில் 1.2 பில்லியன் பவுண்டுகள் செலவில் கட்டப்படவுள்ள இந்த இரட்டை கோபுர கட்டடத்தில் ஒன்றுக்கு சீன இதிகாசங்களில் வரும் ஆண் பறவையான ´ஃபெங்´ என்ற பெயரும், மற்றொன்றுக்கு அதன் ஜோடிப்பறவையான ´ஹுவாங்´ என்ற பெயரும் சூட்டப்படவுள்ளது. 

இந்த இரண்டு கட்டடங்களுக்கும் தேவையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தனக்குத் தானே தயாரித்துக் கொள்ளும் ´ஃபெங்´ கட்டடம், உபரி எரிசக்தியை உஹான் மாகாணத்துக்கு சப்ளை செய்யும். 

பெண் பறவையின் பெயரை கொண்ட ´ஹுவாங்´ கட்டடத்தில் உணவகங்கள் மற்றும் 100 மாடிகளில் தாவரவியல் பூங்கா ஆகியவை இடம்பெறும். 

கட்டடத்தின் கீழ்பகுதியில், பிரெஞ்சு தெரு, ஜப்பான் தெரு, துருக்கி தெரு போன்ற தெருக்கள் அந்தந்த நாட்டு கலாசார பானியில் அமைக்கப்பட்டு, சீன மக்கள் இவற்றை காண தேவையில்லாமல் வெளிநாடுகளுக்கு போவதை தவிர்க்கும் வகையில் பொழுது போக்கு மையங்களும் அமைக்கப்படவுள்ளது. 

ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் வானளாவ எழப்போகும் இந்த இரட்டை கோபுரத்தின் வேலைகள் நிறைவடைந்து விட்டால் உலகின் அதிக உயரமான கட்டடம் என்ற சிறப்பினை இது பெற்று விடும்.