ஸ்ருதி இல்ல… பிபாஷாபாசுக்கு லக்…

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் தீபாவளிதினத்தில் உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் விஜய்தன் அடுத்த படத்திற்கான ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
 
சிம்புதேவன் இயக்கும் விஜய் 58 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஏற்கனவேஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளீயாகியுள்ளது.விஜய்க்கு ஜோடியாக நடிக்க இன்னொரு நடிகையை படத்தின் இயக்குனர் சிம்புதேவன்தேர்வு செய்துள்ளார்.
 
ஏற்கனவே விஜய்யுண்ட குஷி திரைப்படத்தில் நடித்த பிபாஷாபாசுதான் அந்த நடிகைஎன்பது தற்போது தெரியவந்துள்ளது. பிபாஷா பாசு பாலிவுட்டில் தனதுகவர்ச்சிகரமான நடிப்பால் கலக்கி வரும் நிலையில் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாலிவுட்டில்ஸ்ருதிஹாசனுக்கு பிபாஷாபாசுவுக்கும் இடையே கவர்ச்சி போட்டி நடந்து வரும்நிலையில் அந்த போட்டி தற்போது கோலிவுட்டிலும் தொடர உள்ளது.
 
பிபாஷாபாசுவின் புதிய வரவு ஸ்ருதிஹாசனுக்கு கடும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. பிபாஷாபாசுவின் புதியவரவால் தன்னுடைய கேரக்டரின்முக்கியத்துவம் குறைக்கப்படும் அபாயம் இருப்பதால் அவர் படத்தில் இருந்துவிலகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பிபாஷாபாசுவை படத்தில் இணைப்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைதான் நடந்துவருவதாகவும், இதுகுறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள்மிகைப்படுத்தப்பட்டவை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேபடத்தில் ஹன்சிகாவும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தனஎன்பது குறிப்பிடத்தக்கது.