ராணி முகர்‌ஜியின் அய்யா பார்ப்பதற்கு தயாராகுங்கள்

நாயகியை முன்னிலைப்படுத்தி இந்திய சினிமாவில் இதற்கு முன் இத்தனைப் படங்கள் வந்ததில்லை. வித்யா பாலனின் தி டர்ட்டி பிக்சர், கஹானி, க‌ரீனா கபூ‌‌ரின் ஹீரோயின், ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ், ராணி முகர்‌ஜியின் அய்யா...

இதில் அய்யா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. பிருத்விரா‌‌ஜ் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் ஹைலைட்களில் ஒன்று ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் நடந்தப்பட்ட படப்பிடிப்பு.

இதில் மும்பை ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் பிருத்விரா‌ஜ் நடிப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதே கல்லூ‌‌ரியில் படப்பிடிப்பை நடத்தினால் நன்றாக இருக்கும் என அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு முன் ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் பற்றி சொல்லியாக வேண்டும்.

125 வருட பழமையுள்ள சிற்பங்கள் இங்கு உள்ளன. ஒருமுறை நடந்த படப்பிடிப்பில் இந்த அ‌‌ரிய ‌சிற்பங்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு இங்கு படப்பிடிப்பு அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் அய்யா யூனிட் ரொம்பவே போராடி அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியது.

ஹீரோயின் ஓ‌‌ரியண்ட் படங்கள் எல்லாம் பாலிவுட்டில் வெற்றி பெற்றிருக்கின்றன. அய்யா எப்படி என்பது அக்டோபர் 12 ஆம் திகதி தெ‌ரிந்துவிடும்.