ரணிலை பிரதமராக நியமிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த வாரம்

ரணிலை பிரதமராக நியமிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த வாரம்
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் அவரது அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்திற்கு அமைவான புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த வாரம் கையெழுத்திடப்பட உள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட 32 தரப்பினர் இந்த இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளனர்.
 
சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய கொள்கை ஒன்றின் மூலமாக நாட்டை வழிநடத்தி செல்வது இந்த இணக்கப்பாட்டு வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
 
இதனடிப்படையில், நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குதல், ஜனாதிபதியாக பதவியேற்று 100 தினங்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றம் செய்தல், 18வது அரசியல் அமைப்பு திருத்த சட்டத்தை இரத்து செய்து, 17வது திருத்த சட்டத்தை மீண்டும்அமுல்படுத்தல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல் உட்பட பல யோசனைகளை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.