ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்: சஜித்

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்: சஜித்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியிக் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 
தேசிய ரயில்வே சேவைகளின் 19ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 
 
ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக யார் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்பது தொடர்பாக விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாம் ஏற்கெனவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டிட வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம்.
 
அழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கும் நாட்டை ஊழல் மிக்க அரசாங்கத்திடமிருந்து காப்பாற்றவேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியாவுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் மூலம் மாத்திரமே மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும்.
 
தேர்தலுக்கு தேர்தல் மற்றும் வரவு-செலவுத்திட்டங்களின் மூலம் மக்களை இந்த அரசாங்கம் சிதறடிக்கின்றது. மருந்து மற்றும் மின்நிலையங்களில் தரக்குறைவான சேவைகளை அரசாங்கம் வழங்க முயற்சிப்பதை, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருக்கும் தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்துகின்றன. 
 
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஆனால் ஜெனீவாவில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியேகபூர்வ வாசஸ்தலத்தை அமைக்கும் பணிகளை, தமிழீழ விடுதலை புலிகள் சார்பான நிறுவனத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.