யுத்தக் குற்றம் புரிந்த இருவருக்கு ஆயுள்தண்டனை

கம்போடியாவில் யுத்தக் குற்றம் புரிந்த கீமர் ரோஜ் கட்சியின் தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகளின் யுத்தகுற்ற தீர்ப்பாயம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.   
 
கம்போடியாவில் கீமர் ரோஜ் கட்சியின் ஆட்சிக் காலத்தில்  20 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் யுத்தக் குற்ற விசாரணை தீர்ப்பாயம் ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. 
 
எவ்வாறாயினும் இந்த கட்சியின் தலைவரும், பிரதான யுத்தக் குற்றவாளி என கருதப்பட்டவருமான பொல் பொட் 1998ம் ஆண்டு உயிரிழந்தார்.   
 
எனினும் அவரது உதவியாளராக இருந்த நோவுன் சே மற்றும் மாவோயிஸ்ட் ஆட்சியின் தலைவர் கீயு சம்பன் ஆகிய இருவருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.   இன்படி இந்த யுத்தக் குற்றங்கள் இடம் பெற்று மூன்று தசாப்தங்களின்  பின்னர், அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.   
 
யுத்தக் குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் முதலாவது அரசத் தலைவர்கள் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.