யாழ். வைத்தியசாலை தாதியருக்கு வைத்தியசாலைக்குள் விடுதிகள்

யாழ். வைத்தியசாலை தாதியருக்கு வைத்தியசாலைக்குள் விடுதிகள்

யாழ்.போதனா வைத்தியசாலை தாதி ஒருவர் ஆனைப்பந்தி தாதியர் விடுதியில் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தாதியர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜா இன்று திங்கள் கிழமை தெரிவித்தார்.

தாதியர்களுக்குரிய பாதுப்பை அதிகரிப்பதற்காக வைத்தியசாலை தாதியர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் தாதியர்களுக்குரிய விடுதிகள் அமைப்பது தொடர்பாக ஆராயப்படும் எனக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

லிப்ட் பொருத்தும் பணிகள் அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் நீண்ட காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் லிப்ட் பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை மின்சாரசபையினால் லிப்ட் பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சீன அரசின் நிதியுதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுவர் வைத்தியர் பிரிவில் 4 மாடிக் கட்டிடம் கட்டுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடத்தில் அந்த கட்டிடம் கட்டுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.