யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாதா ஆலய வருடாந்த திருவிழா

யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாதா ஆலய வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

இலங்கையின் யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை பிரதேசத்தில் அமைந்துள்ளது சாட்டி சித்தாந்திரை மாதா ஆலயம். அந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா பிரார்த்தனைக்கு பிறகு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஜெபமும்,திருப்பலிப் பூசையும் நடந்தது. இறுதியில் திருச்சொரூப பவனி நடைபெற்றது.

இந்தத் திருவிழா வரும் 15ம் திகதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும். திருவிழா வழிபாடுகளில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட தென்பகுதி வாழ் பெரும்பான்மையின கிறிஸ்தவர்களும் கலந்து கொள்வார்கள்.

மன்னாரில் உள்ள மடு ஆலயத்தை பெரியமடு ஆலயம் என்றும், இதனை சின்னமடு ஆலயம் என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது.