யாழில் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காக மின்விநியோகம் தடைப்படும்

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் சில பிரதேசங்களில் மின்விநியோகம்  தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் புன்னாலைக்கட்டுவன், அச்செழு, அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப்பிரதேசம் ஆகிய இடங்கள் தவிர்ந்த யாழ்.குடாநாடு முழுவதும், வியாபாரிமூலை, அல்வாய், சக்கோட்டை, பருத்தித்துறை நகரப்பகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

10,12,14 ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் பண்டைத்தரிப்பு, சில்லாலை, நிச்சாமம், விளான், இளவாலை, மாதகல், சாந்தை, வடலியடைப்பு, இடும்பன் பிரதேசம், தொல்புரம், சுழிபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

11, 13 ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது