மோனல் கஜாரின் திடீர் மயக்கத்திற்கு காரணம் என்னவோ ?

பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார். இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படம் மூலம் தமிழக நாயகியாக அறிமுகமாகிறார். இவர் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் நடித்த காட்சியை படமாக்கிய போது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானர்கள்.

உடனே, மோனலை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மோனலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மூச்சுத் திணறலும் அஜீரண கோளாறும் இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக கூறினார். இதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.