மைத்திரிபாலவின் பதவி அனுரபிரியதர்ஷன யாப்பாவிற்கு

மைத்திரிபாலவின் பதவி அனுரபிரியதர்ஷன யாப்பாவிற்கு
அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
இதுவரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம், எதிரணி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 
 
இதனையடுத்து அவர் வகித்து வந்த சுகாதார அமைச்சுப் பதவி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வகித்து வந்த பதவிகள் என்பனவற்றில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.