மீண்டும் இளைய தளபதியுடன் இணையும் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் மீண்டும் இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் விஜய்யும் சத்யராஜும் இணைந்து நடித்தனர்.

நண்பன் படத்திற்கான ஊடகங்களின் சந்திப்பில், இந்தியாவின் மிகச்சிறந்த நடிகராக விஜய்யை காண்கிறேன் என நடிகர் சத்யராஜ் புகழ்ந்து தள்ளினார்.

இந்நிலையில் தாண்டவம் விஜய் இயக்கும் அடுத்த படத்தில் இளைய தளபதி விஜய் நாயகனாக நடிக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளநிலையில் இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.

படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தை ‘விஷ்ணு புரொடக்சன்ஸ்’ சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.