மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஐ’ படத்தின் ‘மோசன் போஸ்டர்’ வெளியானது (Video)

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஐ’ படத்தின் ‘மோசன் போஸ்டர்’ வெளியானது (Video)
ஐ படம் எப்போது வரும்? பாடல்கள் எவ்வாறு இருக்கும்? படம் எப்படி இருக்கும்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வி? இந்த கேள்விகளுக்கு விடை எதிர்வரும் தீபாவளி அன்று கிடைக்கவுள்ளது. ஆம் ஐ திரைப்படம் அன்றைய தினம் வெளியாகவுள்ளது.
 
படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிற நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் தலைப்பில் சின்ன மாற்றம் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
 
இதுநாள் வரை ஐ என்ற தலைப்பை ஆங்கிலத்தில் Ai என்று கூறிவந்த நிலையில், நேற்று வந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில் ‘I’ என்று குறிபிட்டு இருந்தது.
 
இந்நிலையில் படத்தின் ‘மோசன் போஸ்டர்’ இன்றைய தினம் வெளியாகியுள்ளது. மிகவும் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளது ஐ படத்தின் மோசன் போஸ்டர்.
 
ஐ படத்தின் பாடல்களை வெளியிடும் சோனி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.