மாவீரர் தினம் அனுஷ்டிப்போரை கண்காணிக்க விசேட புலனாய்வுப் பிரிவினராம்! யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

மாவீரர் தினம் அனுஷ்டிப்போரை கண்காணிக்க விசேட புலனாய்வுப் பிரிவினராம்! யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

 மாவீரர் தினமா, அப்படியொரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுகின்றதா, மாவீரர் தினம் என ஒரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவதில்லை. நடத்தப்படுவதற்கும் இடமில்லை. மீறி நடத்தினால் எவர் என பார்க்காமல் கைது செய்வோம். அதற்காக விசேட புலனாய்வு பிரிவினை களமிறக்கியிருக்கிறோம் என யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கூறியுள்ளார்.

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களுடைய நினைவு தினம் நவம்பர் மாதம் 27ம் திகதி அ னுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் படையினரினதும், புலனாய்வாளர்களினதும் அதீ த நடமாட்டம் உள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
மாவீரர் தினம் என்பது பயங்கரவாதிகளின் தினம். மாவீரர் தினம் என்ற ஒரு நிகழ்வு இலங்கை யில் இல்லை. இலங்கையில் அல்லாத ஒன்றை அதுவும் பயங்கரவாதிகளை நினைவு கூரும் ஒன் றை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்?
 
எனவே அவ்வாறான நிகழ்வுக்கு இலங்கையில் இடமில்லை. அதனை மீறி நடத்தினால் யாராக இருந்தாலும் கைது செய்வோம். அதற்காக யாழ்.குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் மற்றும் படையினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
 
அவர்கள் வீதி சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றி வளைப்புக்கள், திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். எனவே மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும்.
 
மக்களை சிலர் உசுப்பேற்றுகிறார்கள். மேலும் 27ம் திகதி யாழ்.குடாநாட்டில் அனைத்து நிகழ்வு களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக சேர்.பொன்.இராமநாதன் அன்றைய தினம் பிறந்தவ ர் எனவே அவருடைய நிகழ்வை கொண்டாடவுள்ளதாகக் கூறி மாவீரர் தினம் கொண்டாடக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.
 
எனவே அந்த பிறந்தநாள் நிகழ்வுக்கும் நாம் தடை விதித்துள்ளோம்.எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். பொது இடங்களில் கூடி நிற்கவேண்டாம்.
 
ஆலயங்க ளில் பூஜை வழிபாடுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு நடைபெற்றதாக அறிந்தால் கைது செய்யப்படுவீர்கள். எனவே பயங்கரவாதிகளுக்கு நினைவு நாள் நடத்தாமல் மற்றவர்களுடைய உசுப்பேற்றலை தவிர்த்து இருங்கள் என்றார்.