போடா போடி பாடல்கள் மிக விரைவில் வெளியீடு

 

சிம்புவின் போடா போடி படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை வரும் 10ம் திகதி நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சிம்பு, சரத்குமார் மகள் வரலட்சமி ஜோடியாக நடிக்கும் போடா போடி திரைப்படத்திற்கான பணிகள் ஒரு வழியாக முடிந்து வருகிறது.

2 வருடங்களாக இழுக்கப்பட்ட இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் சமீபத்தில் மும்பையில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே வெளியான லவ் பண்ணலாமா வேணாமா என்ற ஒரு பாடல் வெளியானது.

தற்போது வரும் 10ம் திகதி படத்தின் பாடல்களை வெளியிட போடா போடி படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது படத்தின் போஸ்ட்புரடக்ஸன் வேலைகளையும் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளதனால் இதனால் பாடல் வெளியீட்டினைத் தொடர்ந்து தீபாவளிக்கு படத்தினை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறதாம்.

இப்படத்தில் சிம்பு, வரலட்சுமியுடன் சோபனா, வீடிவீ. கணேஸ், பிரேம்ஜி மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.