பொது வேட்பாளராக நியமித்தமைக்கு நன்றி - மைத்திரி

பொது வேட்பாளராக நியமித்தமைக்கு நன்றி - மைத்திரி
எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
 
குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
தற்போது நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட போதே இவ்வாறு கூறினார். 
 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 
 
இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் 
 
01) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்வதாகவும், 
 
02) அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாகவும், 
 
03) ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும், 
 
05) 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும்" குறிப்பிட்டார்.