பராக் ஒபாமாவுக்கு தலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா ஜனாதிபதியாக மீண்டும் தேரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு தலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணையத்தளம் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள அந்த மின்னஞ்சலில்இஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்க படைகள் தோல்வி அடைந்து உள்ளன.

அதை ஏற்றுக்கொண்டு, அமெரிக்க படைகளை உடனடியாக அங்கிருந்து மீள பெறவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

அத்துடன், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு தமது புனித பூமியில் இனிமேலும் அமெரிக்க படைகள் இருக்கக் கூடாது எனவும் மின்னஞ்சலில் தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்