பத்திரிகையாளராக மாறிய அதர்வா

பத்திரிகையாளராக மாறிய அதர்வா
‘இரும்பு குதிரை’ படத்திற்கு அதர்வா ‘கணிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். துப்பறியும் திகில் கதையாக உருவாகும் இப்படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் என்பவர் இயக்கி வருகிறார்.
 
அதர்வாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கேத்ரீன் தெரசா நடிக்கிறார். டிரம்ஸ் சிவமணி இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
 
இப்படத்தில் அதர்வா ஒரு டிவி ரிப்போர்ட்டராக வருகிறாராம். இதற்காக தற்போது நிறைய டிவி நியூஸ் சேனல்களை பார்த்து இந்த கதாபாத்திரத்திற்கு மெருகூட்டி வருகிறாராம்.
 
விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற இருக்கிறது.