பண்டாரநாயக்க பிறந்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தல்: பண்டாரநாயக்கவினருக்கு சாதமாக அமையுமா?

பண்டாரநாயக்க பிறந்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தல்: பண்டாரநாயக்கவினருக்கு சாதமாக அமையுமா?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி 8 ஆம் திகதி சுபதினத்தில் நடத்த தீர்மானித்துள்ளார்.
 
எனினும் அந்த திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்காவின் பிறந்த  தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனால், பண்டாரநாயக்க குடும்பத்தினருக்கு இந்த தினம் சாதமாக அமையக் கூடும் என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் வேட்புமனுக்கள் டிசம்பர் 8 ஆம் திகதி ஏற்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளரின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 
இதனிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மைத்திரிபால சிறிசேன, தேர்தல் ஆணையாளரை தனக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் நியாயமான தேர்தலை நடத்துவார் என நம்புவதாகவும் கூறியிருந்தார்.