நான் நெருப்பு – யாரும் கிட்ட நெருங்க முடியாது!

நான் நெருப்பு – யாரும் கிட்ட நெருங்க முடியாது!
நான்நெருப்பு என்னிடம் யாரும் வாலாட்ட முடியாது என்றார் பிபாசா பாசு. தமன்னா, பிபாசா பாசு, இஷா குப்தா, சயீப் அலிகான் ஆகியோர் நடித்த இந்தி படம்ஹம்சகல்ஸ். சாஜித் கான் டைரக்டு செய்தார்.
 
இப்பட புரமோஷன் நிகழ்ச்சியைபிபாசா பாசு புறக்கணித்தார். தமன்னாவுக்கு சீன் அதிகம் கொடுத்துவிட்டு தான்நடித்த காட்சிகளை நிறைய கட் செய்ததால் பிபாசா புறக்கணித்ததாக கூறப்பட்டது.
 
ஆனால் பிபாசாவிடம் இயக்குனர் தவறாக நடக்க முயன்றதாலேயே அவர் புரமோஷன்நிகழ்ச்சிகளுக்கு வரமறுத்ததாக பாலிவுட் பத்திரிகைகளில் தகவல் வெளியாகிஉள்ளது.
 
இதுகுறித்து பிபாசா பாசு கூறியதாவது: இயக்குனர் சாஜித்என்னிடம் தவறாக நடக்க முயன்றதால்தான் நான் பட புரமோஷன் நிகழ்ச்சிக்குசெல்லவில்லை என்று வதந்தி கிளப்பி உள்ளனர். அப்படி எந்த சம்பவமும்நடக்கவில்லை. என்னிடம் யாரும் நெருங்க முடியாது. நான் நெருப்பு போன்றவள்.யாராவது தவறாக நடக்கவோ, பேசவோ முயன்றால் அவர்களை அப்போதே விரட்டியடிப்பேன்.
 
என்னைபாதுகாத்துக் கொள்ள எனக்கு தெரியும். என்னிடம் அப்படி நடக்க யாருக்கும்தைரியம் கிடையாது. வேறு நடிகையிடம் இயக்குனர் தவறாக நடக்க முயன்றாரா என்பதுஎனக்கு தெரியாது. ஆனால் இயக்குனர் என்னிடம் படத்தின் ஸ்கிரிப்ட் பற்றியோஎனது வேடம்பற்றியோ கூறவில்லை. சொன்னதை செய்தால் போதும் என்றார். இதை என்அம்மாவிடம் சொல்லி நான் அழுதிருக்கிறேன்.இவ்வாறு பிபாசா பாசு கூறினார்.