துப்பாக்கி இளையதளபதி விஜய்க்கே உரியது – வழக்கு முடிவுக்கு வந்தது

 

இளையதளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் துப்பாக்கி திரைப்படத்தின் தலைப்பு மீதான வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

”கள்ளத்துப்பாக்கி “ திரைப்பட குழுவினர் துப்பாக்கி திரைப்பட தலைப்பு தொடர்பாக வழக்கு ஒன்றினை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர். இரண்டு தலைப்புகளும் ஒரே மாதிரி இருப்பதால் “துப்பாக்கி” தலைப்பை மாற்றும்வண்ணம் அவ் வழக்கில் கோரியிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்து வந்தது. பத்து தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட இதன் தீர்ப்பு இன்றைய தினம் மறுபடி கோர்டுக்கு வந்திருந்தது. இந்த நிலையில் கள்ளத்துப்பாக்கி குழுவினர் தமது வழக்கினை வாபஸ் பெற்றுள்ளனர்.