துப்பாக்கி, நீர்ப்பறவை உட்பட நான்கு படங்களின் இசை நாளை வெளியீடு!

விஜய்யின் துப்பாக்கி, சீனு ராமசாமியின் நீர்ப்பறவை உள்ளிட்ட நான்கு படங்களின் இசை வெளியீடு நாளை நடக்கவிருக்கிறது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி. இந்தப் படத்தின் பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்த நிலையில் நாளை காலை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் இசை வெளியிடப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசை தந்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் நீர்ப்பறவை படத்தின் இசையும் நாளைதான் வெளியாகிறது. ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
தமன் இசையமைத்துள்ள, சிம்பு – வரலட்சுமி நடிப்பில் ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருந்த போடா போடி படத்தின் இசையும் நாளை பிற்பகலில் வெளியாகிறது.
நாளை இசை வெளியீடு நடக்கும் இன்னுமொரு படம் விஜயநகரம். சத்யம் திரையரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.