விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கம்: அரசாங்கம் கரிசனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கம்: அரசாங்கம் கரிசனை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன் அந்த தீர்ப்பு தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
இந்த தீர்ப்பு குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஆழமாக ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்குறைஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.